Sunday, June 05, 2005

உனக்கு என்றாவது இப்படி தோன்றியதா?

உயிர் கொண்ட காதல்
உண்மையன்பே!-நீ
உரியவள் எனக்கே!
உரத்து தான் சொல்ல முடியவில்லை
உனக்கு மட்டும் சொல்ல
நெஞ்சில் உரமுமில்லை-உனை
காணும் நேரமெல்லாம்-உயிர்
காதல் நெஞ்சை தொடும்!-நெடு
நேரம் கதைக் வெண்டுமென்ற
ஆசையும் வரும்...!
காணத நேரம் நெஞ்சில்
தவிப்பு வரும்....
தனிமையில் ஏனோ
அழுகை வரும்.....-
என்னவளே!
உனக்கு என்றாவது
இப்படி தோன்றியதா?

புரியவில்லை

கோணங்கள் மாறிய -என்
கோலங்கள் மாற்றியவளே!-நான்
கொண்ட காதல் நிஜமென்று-உனக்கு
நிலை நிறுத்திட என்ன செய்ய?
மற்றவர் போல் நானும்
பள்ளி முதல் வீடு வரை-உன்
பின்னால் வரவா?-இல்லை
படிப்பு தனை தொலைத்து விட்டு
பாவை உன்னோடு இருக்கவா?-இவை
உனக்கு பிடிக்காதவை- பின்
நான் என்ன செய்ய?
என்னுயிரானவளே!
எனக்கு புரியவில்லை-என்
காதலை எப்படி உனக்கு
புரியவைப்பதென்று......